கடல் தொடர்பில் விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கை நீக்கம்!
#SriLanka
#weather
Mayoorikka
55 minutes ago
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. தாழமுக்கமானது காங்கேசன்துறையிலிருந்து சுமார் 320 கி.மீ வடகிழக்கே வடக்கு அகலாங்கு 12.5 இற்கும் கிழக்கு நெட்டாங்கு 80.5 இற்கும் அருகில் மையம் கொண்டுள்ளது.
இந்த அமைப்பு தொடர்ந்து நாட்டிலிருந்து விலகி வடக்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழந்து வருகிறது.
இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
