வெள்ளம் பாதித்த பகுதிகளில் குடிநீர் தொடர்பில் அவதானம் செலுத்துக! மக்களுக்கு கோரிக்கை

#SriLanka
Mayoorikka
1 hour ago
வெள்ளம் பாதித்த பகுதிகளில் குடிநீர் தொடர்பில் அவதானம் செலுத்துக! மக்களுக்கு கோரிக்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

 வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் உள்ள கிணற்று நீரைப் பருகுவதைத் தவிர்க்குமாறு சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்துள்ளார். 

 அத்துடன், வயிற்றுப்போக்கு போன்ற நிலைமைகள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதால், இயலுமானவரை கொதித்தாறிய நீரையே அருந்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த செயலாளர், சிறிய குழந்தைகளுக்கும் கொதித்தாறிய நீரை மட்டுமே குடிப்பதற்கு வழங்குமாறும் குறிப்பிட்டார். 

 தற்போதுள்ள அனர்த்த நிலை காரணமாக, வீடுகளைச் சுற்றிலும் நுளம்புகள் பெருகும் இடங்கள் இருக்க வாய்ப்புள்ளதால், வீடுகளைச் சுத்தம் செய்யும் போது நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்தொழிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். 

 அவ்வாறு செய்யாவிட்டால் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் பரவும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் சமில் முத்துக்குட மேலும் சுட்டிக்காட்டினார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை