நிவாரணப் பணியில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபத்தில் விமானி உயிரிழப்பு!
சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது இன்று (30) பிற்பகல் லுணுவில பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழந்தார்.
விங் கமாண்டராகப் பதவி வகித்த அவர், மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த விமானி 41 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வென்னப்புவ மற்றும் லுணுவில அண்மித்த பிரதேசத்தில் பெல் 212 ரக ஹெலிகொப்டர் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான வேளையில், லுணுவில பாலத்திற்கு அருகில் இருந்தவர்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்குவதற்கு விமானப்படை அதிகாரிகள் பாதுகாப்பாக தரையிறங்க முயற்சித்த வேளையில், பாலத்தில் மக்கள் தங்கியிருந்தமையால் அந்த முயற்சி தடைப்பட்டது.
இதன்போதே இந்த விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
