நாட்டின் சில பகுதிகளுக்கு இன்று மழை வீழ்ச்சி!
டிட்வா சூறாவளியானது நலிவடைந்து, ஒரு ஆழ்ந்த தாழ் அமுக்கமாக காங்கேசன்துறைக்கு வடக்கு - வடகிழக்குத் திசையில் சுமார் 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது மேலும் நலிவடைந்து வட திசையை நோக்கி நாட்டை விட்டு அப்பால் நகர்கிறது. வடக்கு, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்கள், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யும்.
ஊவா, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை வரும். பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய நேரங்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
நாட்டை சூழ்ந்த கடல் பிராந்தியங்களுக்கு மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. களுத்துறை முதல் காலி, மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25-35 கிமீ வேகத்தில் தென்மேற்கு திசையிலிருந்து காற்று வீசும். புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும்.
இவ்வாறான சூழலில் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக இருக்கும்.
இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று ஏற்படும் போது கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
