போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு தொடர்பில் அதிக கவனம்! ஜனாதிபதி
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக நிறுவப்பட்ட முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபையின் இரண்டாவது அமர்வில் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது
போதைப்பொருட்களை கைப்பற்றும் பணிகள் மற்றும் அவற்றுக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு தொடர்பாகவும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை இங்கு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அது குறித்த அனைத்து கருத்துகளையும் உள்ளடக்கி அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் புதிய திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், அது தொடர்பான அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் அறிவியல் ரீதியான வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன்,புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக பயிற்சி பெற்ற மனித வளத்தை உருவாக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.
கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை குறுகிய காலத்திற்குள் அழிக்கும் வகையில் அடுத்த மார்ச் மாதத்திற்குள் புதிய சட்ட வரைவைத் தயாரிக்குமாறு நீதி அமைச்சிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய திட்டத்துடன் இணைந்த வகையில் பிரதேச மட்டத்தில் ஏற்பாடுகளை செய்வது போன்று, நிறுவன மட்டங்களிலும் குழுக்களை அமைத்து, இந்த தேசிய பணிக்கு முழு சமூகத்தின் பங்களிப்பையும் பெறுவதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
