ஈரான் ஆக்கிரமிப்பு: பாகிஸ்தான் இராணுவத் தளபதி சவூதி பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு!

#world_news #Pakistan #Minister #War #President #Iran #ImportantNews #SaudiArabia #IranVsIsrael
Lakhi
3 months ago
ஈரான் ஆக்கிரமிப்பு: பாகிஸ்தான் இராணுவத் தளபதி சவூதி பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு!

சவூதி அரேபியாவிற்கு எதிராக ஈரான் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்து, சவூதி பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மான் அல் சவுத் மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையே அண்மையில் கையெழுத்திடப்பட்ட மூலோபாய பாதுகாப்பு உடன்படிக்கையின் அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரான் தரப்பானது அறிவுப்பூர்வமாகவும், நிதானமாகவும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும், தவறான கணக்கீடுகளில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்றும் இரு தரப்பினரும் இதன்போது நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும், சகோதரத்துவ நாடுகளுக்கு இடையிலான இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதுடன், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையில் கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, ஒரு நாட்டின் மீது தொடுக்கப்படும் ஆக்கிரமிப்பு இரு நாடுகளுக்குமான அச்சுறுத்தலாகக் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4