இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் ஏற்றுமதி வருமானம் எதிர்பார்த்ததை விட அதிகரிப்பு!

#SriLanka
Mayoorikka
1 day ago
இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் ஏற்றுமதி வருமானம் எதிர்பார்த்ததை  விட அதிகரிப்பு!

2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 14.4 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

 2025 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் ஏற்றுமதிகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் 6.0% நிலையான முன்னேற்றத்தையும் கண்டுள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு சபை குறிப்பிடுகிறது. 

 இலங்கை சுங்கத்துறை வெளியிட்ட தரவுகளின்படி, இரத்தினக் கற்கள், நகைகள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்களுடன் சேர்த்து, மொத்த ஏற்றுமதி வருவாய் 14,433.82 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 

 இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட ஒப்பீட்டளவில் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் ஒரு வருடத்தின் முதல் 10 மாதங்களில் ஏற்றுமதி வருவாய் 14 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

 இதேவேளை, இந்தக் காலகட்டத்தில், தேங்காய் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி முதல் முறையாக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் தாண்டியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை