இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரம்!
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்க வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று திங்கட்கிழமை (24) சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரம் அமைச்சரவை இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட முன்மொழிவு தற்போது இத்தாலிக்கான இலங்கை தூதருக்கு அறிவிக்கப்படும். அதனை தொடர்ந்து, இத்தாலியில் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்குப் பொறுப்பான நிறுவனங்களுடன் புரிந்தணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்த செயல்முறையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
