200 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் - பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பெரும்பாலான ஆறுகள் நிரம்பியுள்ளதால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் துறை எச்சரித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு அருகில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக நாட்டின் 06 மாகாணங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, தெற்கு, ஊவா மற்றும் மேற்கு மாகாணங்களில் இந்த ஆபத்து உள்ளது.
அதன்படி, இன்று (25) முதல் நவம்பர் 30, ஞாயிற்றுக்கிழமை வரை மேற்கூறிய மாகாணங்களில் வெள்ள அபாயம் இருப்பதால், அனைத்து ஆறுகளின் கீழ் பள்ளத்தாக்குகளில் வசிக்கும் மக்களும், அந்தப் பகுதிகளின் வழியாக பயணிக்கும் மக்களும் நீர்ப்பாசனத் துறையால் வெளியிடப்பட்ட ஆரம்ப வெள்ள எச்சரிக்கை அறிவிப்புகளை உன்னிப்பாகக் கவனிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
