தொல்லியல் பிரதேச பெயர்ப் பலகைகளை அகற்றியவர் கைது! ஏழுபேருக்கு வலைவீச்சு

#SriLanka
Mayoorikka
5 hours ago
தொல்லியல் பிரதேச பெயர்ப் பலகைகளை அகற்றியவர் கைது! ஏழுபேருக்கு வலைவீச்சு

மட்டக்களப்பு வாழைச்சேனை மற்றும் பட்டிப்பளை பகுதிகளில், தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி நாட்டப்பட்ட பெயர் பலகைகள், பிரதேச சபையால் அகற்றப்பட்ட விடயம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 மட்டக்களப்பு - கிரான் பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பில், 7 பேர் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

 சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காக 4 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களில் வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சந்தேகநபர்களால் அகற்றப்பட்ட பெயர் பலகைகளும் வாழைச்சேனை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!