மரண அறிவித்தல்- அமரர் நாகலிங்கம் சோதிநாதன்
அமரர் நாகலிங்கம் சோதிநாதன் அவர்கள் இறைபதம் அடைந்து விட்டார். அன்னார் இரணைமடு கனகாம்பிகை அம்பாளின் ஆலயத்தின் முன்னை நாள் ,தலைவராக,போசகராக தற்போது தர்மகர்த்தா சபை உறுப்பினராக இருந்து கடமையாற்றி, அம்பாள் ஆலய வளர்ச்சியில் தன்னை அர்ப்பணித்த மாமனிதர்.
கிளிநொச்சி மண்ணில் கல்வி வளர்ச்சியில் மட்டுமல்லாது தான் பணி புரிந்த பலதுறைகளை வளர்த்து அதற்கான அடையாளங்களை நிறுவி பெருமை கொண்ட நல்ல மனிதர்.

அவர்களின் குடும்பத்தோடு எல்லோரும் ஆன்மீக பற்றும்,கல்வி,பொது ,பண்பு அத்தனையும் அவர்களோடு ஊறிப்போனது ஒன்றாகும்.
பிள்ளைகளை நல்ல நிலைக்கு ஆழக்கி அவருடைய புதல்வன் திரு,கபிலன் அவர்களுடைய ஆன்மீக பணியும், பொதுப்பணியும், சேவை செய்யும் பண்பும் எம்மை சிங்கப்பூர் மண்ணில் வியக்க வைத்தது.

நல்ல சிறந்த மனிதன் சோதிநாதன் சேரை கிளிநொச்சி மண் இழந்து விட்டது என்பதை இட்டு நாம் கவலை அடைகின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்து குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம்.
ஓம்.சாந்தி, சாந்தி, சாந்தி.
(வீடியோ இங்கே )
அனுசரணை
