மருதானையில் சுற்றிவளைக்கப்பட்ட நிறுவனம் - மக்களுக்கு எச்சரிக்கை!
மருதானையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) சிறப்பு புலனாய்வுப் பிரிவால் சோதனை செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனம் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக தொழிலாளர்களை தொடர்ந்து ஆட்சேர்ப்பு செய்து வருவதாக கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மோசடி தொடர்பில் 85 முறைப்பாடுள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்பின்னர் நிறுவனத்தின் உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சோதனையின் போது, உரிமதாரர் மற்றும் நிறுவனத்தில் பணிபுரியும் மூன்று அதிகாரிகள் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டனர். அத்துடன் 256 வெளிநாட்டு பயண கடவுச்சீட்டுகள் உட்பட ஏராளமான ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
சந்தேக நபர்கள் நேற்று (21) மாளிகாவத்தமாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு SLBFE பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. எந்தவொரு நிறுவனம் அல்லது தனிநபரிடமும் பணம் அல்லது கடவுச்சீட்டுகளை ஒப்படைப்பதற்கு முன், அந்த நிறுவனம் செல்லுபடியாகும் உரிமத்தை வைத்திருக்கிறதா என்பதையும், அது அதிகாரப்பூர்வ வேலை உத்தரவுகளைப் பெற்றுள்ளதா என்பதையும் விண்ணப்பதாரர்கள் சரிபார்க்க வேண்டும் என்று அது அறிவுறுத்தியுள்ளது.
சரிபார்ப்புக்காக, பொதுமக்கள் SLBFE இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் (www.slbfe.lk) பார்வையிடலாம் அல்லது உடனடி தகவலுக்கு 1989 ஹாட்லைனைத் தொடர்பு கொள்ளலாம்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
