சாரதியின் தூக்கத்தினால் விபத்துக்குள்ளான கார்: நான்கு பேர் படுகாயம்

#SriLanka
Mayoorikka
1 hour ago
சாரதியின் தூக்கத்தினால் விபத்துக்குள்ளான கார்: நான்கு பேர் படுகாயம்

கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துள் ஊத்து பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் பலத்த காயமடைந்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.

 ஹபறன பகுதியில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று, கந்தளாய் – கித்துள்ஊத்து பகுதியில் விபத்துக்குள்ளானது.

 காரின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாக, அவர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

images/content-image/1763782681.jpg

 இந்த விபத்தில், இரண்டு பெண்கள், ஒரு குழந்தை கார் சாரதி என நால்வரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு கந்தளாய் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

images/content-image/1763782734.jpg

 இந்த விபத்துச் சம்பவம் குறித்து அக்போபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!