நல்லூரில் மாவீரர்களின் நினைவாலயம் அங்குரார்பணம்!

#SriLanka
Mayoorikka
1 hour ago
நல்லூரில் மாவீரர்களின் நினைவாலயம் அங்குரார்பணம்!

தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயம் வெள்ளிக்கிழமை (21) மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

 பொது ஈகைச்சுடரினை , மாவீரரின் தந்தையான தம்பிராசா ஏற்றி வைத்ததை தொடர்ந்து , கல்லறை உருவகத்திற்கு, மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

 அதேவேளை நினைவாலயத்தில் மாவீரர்களின் உருவ படங்கள் சிலவும் பெற்றோரினால் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும், மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் தாய் மண்ணுக்காக தம் உயிர்களை அர்பணித்தவர்களுடன் மாமனிதர்களையும் நாட்டுபற்றாளர்களையும் மற்றும் பல ஆவணப்படுத்தல்களையும் கொண்டு இம்முறை நல்லூர் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

 தலைமுறைகள் கடந்து வாழும் எம் மாவீரச் செல்வங்களின் நினைவாலயத்திற்கு உங்கள் இளைய தலைமுறையினரையும் அழைத்து வந்து வரலாற்றினைக் கடத்துங்கள்.உங்கள் மனப்பதிவுகளைப் பதிந்து விட்டுச் செல்லுங்கள் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!