அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த முஸ்லிம் எம். பி!
ஒரு முஸ்லிம் எம்.பி ஒருவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசல் என்பவரே தனக்கு இவ்வாறு கொலை மிரட்டல் விடுத்ததாக இராமநாதன் அர்ச்சுனா இன்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
புத்தளம் மருத்துவமனை குறித்து நான் ஒரு கேள்வியை எழுப்பிய பிறகு எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட இடத்தில் CCTV கெமராக்கள் இருந்ததாகவும், அவற்றை பயன்படுத்தி இந்தச் சம்பவம் குறித்து முறையான விசாரணையை நடத்துமாறும் பிரதி சபாநாயகரிடம் இராமநாதன் அர்ச்சுனா கோரிக்கை விடுத்தார்.
இந்த விஷயம் தொடர்பாக ஒரு நாடாளுமன்ற சிறப்புரிமை பிரச்சினையை எழுப்புமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவுறுத்தியுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
