திங்கள் முதல் வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் நடைமுறை!
#SriLanka
Mayoorikka
1 hour ago
வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை (24) முதல் தொடங்கும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கொட்டாவையில் அமைந்துள்ள மகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் அட்டை கட்டண முறை நிகழ்வு ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சு கூறியுள்ளது.
இதன்படி, காலி, மாத்தறை மற்றும் பதுளைக்கு செல்லும் பேருந்துகளுக்கான பேருந்து கட்டணங்களுக்கான வங்கி அட்டைகள் மூலமாக பயணிகள் செலுத்தலாம்.
அரசு, தனியார் உட்பட மொத்தம் 05 வங்கிகள் இந்த முயற்சியில் இணைந்துள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
