வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் முதல்நாள் நிகழ்வு
#SriLanka
Mayoorikka
1 hour ago
மாவீரர் வாரம் இன்று ஆரம்பித்துள்ள நிலையில் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது. போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள அவர்களுடைய அலுவலகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு தீபமேற்றியதுடன் மலர் அஞ்சலியும் செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் முன்னாள் போராளிகள், சமூக அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மாவீரர்கள் நினைவாக அஞ்சலி செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
