கிழக்கில் போதைப் பொருள் பாவனை பயிற்சி நிலையம்: அதிரடி தகவல் வெளியிட்ட இளைஞன்
திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் மிகப் பெரிய போதைப் பொருள் பாவனை பயிற்சி நிலையம் இருப்பதாக இளைஞன் ஒருவர் அதிர்ச்சி வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.
போதைப் பொருள் பாவனையை ஒழிப்போம் என்ற தொனிப்பொருளில் கிராம மட்ட கலந்துரையாடல் ஒன்றிலேயே குறித்த இளைஞன் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
கிண்ணியா பிரதேசத்தில் போதைப் பொருள் பாவனை பயிற்சி நிலையம் இருப்பதாகவும் அங்கிருந்து பழகிவிட்டு வெளியில் வந்து ஐஸ் போன்ற போதைப் பொருட்களை இளைஞர்கள் பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த போதை பொருள் ஒழிப்பு செயலணியின் மூலம் எவ்வாறு போதைப் பொருட்களை பயன்படுத்துகின்றார்கள் எப்படி விற்பனையாகின்றது என்றே தெரிவிக்கின்றார்களே ஒழிய அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது இல்லாமல் செய்வது என விளக்கம் கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார்.
இரவு பத்து மணிக்கு பிற்பாடு பொது இடங்களில் இளைஞர்கள் சிலர் போதை பொருட்கள் பாவனையில் ஈடுபடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இதில் சிறுவர்களும் கூடுதலாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த தகவல் தொடர்பான வீடியோவை பார்வையிட:
https://www.tiktok.com/@lanka4media/video/7574341951013522710?_r=1&_t=ZN-91WpQ9UKAic
(வீடியோ இங்கே )
அனுசரணை
