ஜனாதிபதியை சந்தித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு!
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் தமிழ்j் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் இந்த சிறப்பு கலந்துரையாடல் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
திருகோணமலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதைத் தடுக்க இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உறுதி செய்வதன் அவசியம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், எம்.ஏ. சுமந்திரன், எஸ். சிவநேசன் மற்றும் எஸ். சிறீதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
