எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 31 மீனவர்களுக்கும் பத்து வருடம் ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாத சிறை.!
அண்மையில் பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்களுக்கும் பத்துவருடம் ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாத சிறைத்தண்டனை என்கின்ற அடிப்படையில் இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த 31 மீனவர்களும் அண்மையில் கடற்படையால் பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அவர்களால் கடந்த 04 /11/2025 அன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்த நிலையில் 14 நாள் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் இன்று குறித்த வழக்கு விசாரிக்கப்பட்டே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மூன்று படகில் 31 பேர் கைது செய்யப்பட்டனர்
(வீடியோ இங்கே )
அனுசரணை
