பௌத்த மதத்துக்கு அனைவரும் முன்னுரிமை அளியுங்கள்! நாடாளுமன்றத்தில் சஜித்
திருகோணமலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விகாரையில் நேற்று ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில் பொலிஸார் தலையிட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.
இது வகுப்புவாத பதற்றங்களைத் தூண்டும் என்றும் அவர் எச்சரித்தார். பௌத்த மதத்துக்கு அனைவரும் முன்னுரிமை அளியுங்கள் என்றும் அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
புத்த மதத்துக்கு முதன்மையான இடத்தை வழங்கும் அதேவேளையில், பிற மதங்களுக்கு மரியாதை அளிப்பதை உறுதி செய்யும் அரசமைப்பின் இரண்டாம் அத்தியாயத்தை மேற்கோள் காட்டி, 1951 இல் நிறுவப்பட்டு 2010 இல் புத்த விவகாரத் துறையில் பதிவு செய்யப்பட்ட இந்தக் கோயில், வழிபாட்டுத் தலமாக சட்டபூர்வ அந்தஸ்தைக் கொண்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
புத்தர் சிலைகளை வைப்பது மற்றும் அறப்பள்ளி கட்டடங்களை நிர்மாணிப்பது தொடர்பாக உத்தரவுகளைப் பிறப்பித்தமைக்காகப் பொலிஸாருக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
இதுபோன்ற செயல்கள் வகுப்புவாத பதற்றங்களைத் தூண்டக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருந்தால், பௌத்த பிரிவுகளின் மூன்று தலைமைப் பீடாதிபதிகளுடன் பேச்சுவார்த்தை மூலம் அதைத் தீர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வளர்ச்சி நடவடிக்கைகளைச் சீர்குலைக்கப் பொலிஸாரை அனுப்புவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
மேலும் அத்தகைய உத்தரவுகள் யாருடைய அதிகாரத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டன?
அரசு நாட்டின் உச்ச சட்டமான அரசமைப்பைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், அதை மீண்டும் படிக்க வேண்டும்.என குறிப்பிட்டுள்ளார்
(வீடியோ இங்கே )
அனுசரணை
