காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

#India #Rain #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

கனமழை எச்சரிக்கை காரணமாக காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் கடந்த மாதம் 15-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. 

கடந்த மாத இறுதியில் மோந்தா புயலால் தமிழகம், புதுவையில் கனமழை பெய்தது. மேலும் தமிழகத்தில் பெய்த தொடர் மழையால் புதுவையின் சங்கரா பரணி, தென்பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

புதுவையில் உள்ள 26 படுகை அணைகளும் நிரம்பின. ஏரி, குளங்களிலும் மழைநீர் தேங்கி நிரம்பியது. 

இந்த நிலையில் வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடந்த 2 நாட்களாக புதுவையில் தொடர் மழை பெய்து வந்தது.

இன்று அதிகாலை முதல் அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. வானம் இருண்டு வெளிச்சம் இல்லாமல் உள்ளது.

அதேநேரத்தில் காரைக்காலில் கனமழையால் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!