அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களை அன்போடு அரவணைத்துக் கொண்ட சுவிட்சர்லாந்து!
அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களை அன்போடு அரவணைத்துக் கொண்ட ஐரோப்பிய நாடுகளில் ஒன்று பூமியின் சொர்க்கம் என்று கருதப்படுகிற சுவிட்சர்லாந்து.
1996 காலப்பகுதியில் இந்த நாட்டுக்கு நான் வந்தபோது அம் மக்களின் அயராத உழைப்பையும் மன உறுதியையும் கண்டு வியப்பும் மதிப்பும் கொண்டேன்.
ஊரில் உள்ள உறவுகளுக்காக பகலில் ஒரு வேலை, இங்கு வாழவும் பட்ட கடன்களை மீட்ட இரவில் இரண்டாவது வேலை, நாட்டு விடுதலைக்கு பங்களிப்பு நல்க வேண்டி வார இறுதியில் மூன்றாவது வேலை என்று உழைத்து உழைத்து உழைத்து ஒரு தலைமுறையிலேயே உயர்ந்த ஈழத் தமிழ் இனத்தின் மாபெரும் வெற்றிக் கதையை இன்று இங்கு நீங்கள் பார்க்கலாம்.
லட்சத்திற்கும் மேலான ஈழத் தமிழர்கள் இங்கு வாழ்கிறார்கள்.ஒரு தலைமுறையில் நூற்றுக்கணக்கான இளம் மருத்துவர்களையும், பொறியாளர்களையும், சட்ட வல்லுனர்களையும் நிதித்துறை மேலாண்மையாளர்களையும் தொழில் முனைகிறவர்களையும் உருவாக்கி இருக்கிற மாபெரும் தமிழ் வரலாறு இங்கு வாழ்கிற ஈழத்தமிழர்களுக்கு இருக்கிறது.
இந்திய தமிழக உறவுகளும் இவர்களோடு இணைகிற போது பெரும் வல்லமையாக மாற முடியும் என்பது புதிய வியப்பான செய்தி ஒன்றும் அல்ல.
சங்கம் 5 The Rise - எழுமின் 16 வது உலக மாநாட்டிற்காக நேற்று சுவிஸ் தலைவர் Dr.ஸ்ரீ ராசமாணிக்கம் அவர்கள் முன்னெடுப்பில் நடந்த ஒன்று கூடல் மகத்தான புதிய நம்பிக்கைகளை விதைத்திருக்கிறது.
தமிழர் தலை நிமிர் காலம் சாத்தியப்படும் என்கின்ற நம்பிக்கை வளர்கிறது. காலம் நமக்காக வாயில் திறந்து வந்து நிற்கிறது. நம்பிக்கையுடன் அணி திரள்வோம்.
Dr. ஸ்ரீ ராசமாணிக்கம் அவர்களுக்கும் நண்பர் சசி உள்ளிட்ட அத்தனை தமிழ் உறவுகளுக்கும் எழுமின் உலகம் நெஞ்சார்ந்த நன்றிகளை பதிகிறது. மாமதுரையில் சந்திப்போம்!!!
(வீடியோ இங்கே )
அனுசரணை
