போதைப்பொருளுடன் ஐக்கிய மக்கள் சக்தி பிரதேச சபை உறுப்பினர் கைது!

#SriLanka
Mayoorikka
2 hours ago
போதைப்பொருளுடன் ஐக்கிய மக்கள் சக்தி பிரதேச சபை உறுப்பினர்  கைது!

பதுளை, பல்லேவத்த பிரதேசத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

 சந்தேகநபர் கந்தகெட்டிய பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

 அத்துடன், சந்தேகநபர் பிரதேச சபை உறுப்பினராக இருப்பதுடன், ஹாபத்கமுவ மின்சார வேலி பாதுகாப்பு உதவியாளர் உத்தியோகத்தராகவும் கடமையாற்றுவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, பொலிஸார் உளவாளி ஒருவரைப் பயன்படுத்தி மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, விற்பனைக்காகத் தயார் செய்யப்பட்டிருந்த 86 கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன், இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!