நவம்பர் மாத ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Lanka4
Prasu
5 hours ago
நவம்பர் மாத ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

இலக்கிய பிரியவர்களாக விளங்கும் நீங்கள், இசை, கவிதை, நடனம், பாடல் போன்றவற்றில் தனித்திறமையும் ஆர்வமும் கொண்வர்களாக விளங்குவீர்கள்.

சிறப்புப் பலன்கள்

  • உத்யோகஸ்தர்களுக்கு உத்யோகம் சம்பந்தமாக இடமாற்றம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.
  • வியாபாரிகளுக்கு கடன்கள் யாவும் தீர்ந்து கைவசம் உள்ள தொகையில் சிலர் வாகனங்களை வாங்கக் கூடிய வாய்ப்பைப் பெறுவீர்கள்.
  • குடும்பத்தலைவிகளுக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். கர்ப்பிணிப் பெண்கள் தூரத்துப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மகான்கள், ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.
  • கலைஞர்களுக்கு தயாப்பாளர்கள் கிடைத்து தங்களுக்கு இயக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த மாதம் முயற்சி செய்வதை நிறுத்தாதிதீர்கள்.
  • மாணவ, மாணவிகள் வெளிநாட்டிற்குச் சென்று படிக்க ஆர்வம் இருக்கும். அதற்குண்டான முயற்சிகளை மேற்கொள்வர். நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள்.

பரிகாரம்

முருகருக்கு சிவப்பு மலரால் மாலையோ அல்லது பூச்சரமோ கொடுத்து கும்பிடவும்.

ரிஷபம்

நீங்கள், பயணங்களை அடிக்கடி மேற்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

சிறப்புப் பலன்கள்

  • உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். உங்கள் வேலைகளையும் மற்றவர்கள் எடுத்துச் செய்யும் யோகமும் தங்களுக்கு கிடைக்கும்.
  • வியாபாரிகளுக்கு எந்த தொய்வும் ஏற்படாமல் மாறாக லாபமே கிடைக்கும். நிச்சயம் கீழ்நிலைக்கு செல்லாதவாறு இருக்கும். கூட்டு வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அதிக லாபம் உண்டாகும்.
  • குடும்பத் தலைவிகள் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
  • கலைஞர்கள் ஒரு சிலர் வெளியூரிலிருந்து வந்து தாங்கள் முயற்சி செய்த திரைப்படத்தில் தங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். நல்ல கதாபாத்திரம் பெறுவீர்கள்.
  • மாணவர்கள் நன்கு படிக்க வேண்டுமானால் அதிகப்படியாக எழுதிப் பார்ப்பது நல்லது. தேர்வு சமயத்தில் படிப்பதை நிறுத்திவிட்டு தற்போதிருந்தே படிப்பது நல்லது.

பரிகாரம்

லக்ஷ்மி நரசிம்ம பெருமாளை புதன் கிழமை அன்று தரிசிப்பது நல்லது.

மிதுனம்

பெரும்பாலும் மற்றவரிடம் இனிமையாகவும் நாகரிகமாகவும் பேசி பழகுபவர்கள் நீங்கள் என்பதால் உங்களிடம் மனம் விட்டு பேசக் கூடிய உங்கள் நலம் விரும்பிகள் உங்களைச் சுற்றி நிறையவே இருப்பார்கள்.

சிறப்புப் பலன்கள்

  • உத்யோகஸ்தர்களுக்கு அலுவலக விசயமாக தாங்கள் வெளியூர் பயணங்கள் ஏற்படும். கூடுதல் வருவாய் பெறுவீர்கள். தங்களுக்கு பணம் தர வேண்டியவர்கள் தங்களுக்கு தானாகவே முன்வந்து கொடுப்பர்.
  • வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அதிக லாபம் உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.
  • குடும்பத் தலைவிகளுக்கு பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும். வீடு வாங்க கடன் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.
  • கலைஞர்களுக்கு ஒரு சிலருக்கு வேற்று மொழிகளில் நடிக்க அழைப்பு வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது முழுமையாக கவனமாகப் படித்துவிட்டு கையெழுத்திடுவது நல்லது.
  • மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் கூடும. அதிலும் தாங்கள் கோப்பைகளை அள்ளிச் செல்வர்.

பரிகாரம்

திருவேற்காடு மாரியம்மனை வெள்ளிக் கிழமை அன்று தரிசிப்பது நல்லது.

கடகம்

அமைதியான தோற்றமும் அலட்டிக் கொள்ளாத இயல்பான மனநிலையும் பிறரிடம் அன்பு செலுத்தக் கூடியவர் என்ற நற்பெயரையும் பெற்றவர்கள் நீங்கள்.

சிறப்புப்பலன்கள்

  • உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.. வேலையில் இருந்து வந்த தடைகள் யாவும் விலகி .மேலதிகாரிகள் தங்கள் சொல்லிற்கு மதிப்புத் தருவர்.
  • வியாபாரிகள் நீங்கள் இது வரை இல்லாத நம்பிக்கை இனி வியாபாரத்தில் ஜெயிக்கும் எண்ணம் உண்டாகும். அதன்படியே தங்களுக்கு இந்த மாதம் திருப்புமுணையாக இருக்கும்.
  • குடும்பத் தலைவிகள் தங்கள் கணவருடன் இணைந்து தங்கள் வருவாயினை பெருக்க திட்டமிடுவர். தங்கள் இளம் பெண் பிள்ளைகளுக்கு விரும்பியவாறே திருமணம் நடக்கும்.
  • கலைஞர்களுக்கு படம் முடிந்தும் இன்னும் திரைக்கு வராமல் இருப்பவர்களுக்கு இந்த மாதல் திரையிடும் தேதி அறிவிக்கப்படும். மேலும், புதிய வாய்ப்புகளும் கதவைத் தட்டும்.
  • மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். சோம்பேறித்தனத்தை கைவிடுவது நல்லது.

பரிகாரம்

அம்மனுக்கு வெள்ளி கிழமை அன்று மல்லிகை பூச்சரத்தை தரிவிப்பது நல்லது.

தனுசு

எவ்வளவு இன்னல்கள் உங்களை சூழ்ந்தாலும் அதனை எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெற துடிப்பவர். இறுதியில் வெற்றி உங்களுக்கே.

சிறப்புப்பலன்கள்

  • உத்யோகதர்கள் நீங்கள் உயர் அதிகாரிகள் சொன்ன பணியை உடனுடக்குடன் செய்து முடித்தால் தங்களுக்கு நல்ல மரியாதையும் அவர்களின் ஆதரவும் கிடைக்கும்.
  • வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்பவர்கள் உங்கள் முதலீட்டுக்குத் தேவையான தொகையைப் பெற முயற்சி செய்தால் வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும்.
  • குடும்பத் தலைவிகள் தங்கள் மனதை கட்டுக்குள் வைத்துக்கொண்டு ஒருநிலைப் படுத்துவது அவசியம். புதிய நபர்களை நம்பிவிடாதீர்கள்.
  • ககலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது முழுமையாக கவனமாகப் படித்துவிட்டு கையெழுத்திடுவது நல்லது. நல்ல கதாபாத்திரம் கிடைக்கும்.
  • மாணவ மாணவிகள் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்றிறாமல் அன்றாட பாடங்களை அன்றன்றே படித்து வந்தால் மட்டுமே தேர்வுகளில் வெற்றி வாகையை சூடலாம்.

பரிகாரம்

வியாழக் கிழமை அன்று மஞ்சள் மலர் மாலையை தஷிணா மூர்த்தியை அணிவித்து வழிபடுவது நல்லது.

மகரம்

தர்மத்தில் மிகப் பற்று மிக்கவரான நீங்கள் தர்ம நெறிகளை மீறி யார் நடந்து கொண்டாலும் அதைப் பொறுத்துக் கொள்ளாமல் தட்டிக் கேட்க முற்படும் இயல்புள்ளவர்.

சிறப்புப்பலன்கள்

  • உத்யோகஸ்தர்களுக்கு தங்களுடன் வேலை பார்க்கும் உங்கள் சக ஊழிர்களிடம் சட்டென்று சினத்தை காட்டாமல் சாந்தமாக அவர்களை அனுகுவது நல்லது.
  • வியாபாரிகள் தாங்கள் செல்லும் ஊர்களில் தாங்கள் கவனக்குறைவாக இராமல் தங்கள் உடைமைகளை பாதுகாப்புடன் எடுத்துச் செல்வது நல்லது.
  • குடும்பத் தலைவிகள் தங்களின் பிள்ளையின் நலனில் அக்கறை காட்டி அவர்களின் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல பாடுபடுவீர்கள். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
  • கலைஞர்கள் சிலருக்கு போட்டிகளில் கலந்து கொண்டு பாராட்டுகளும், பரிசுகளும் பெறக்கூடிய வாய்ப்புண்டு. சின்னத்திரை மற்றும் சினிமாக்களிலும் வாய்ப்புகள் கிடைக்கும்.
  • மாணவர்கள் தங்களுக்கு சிலருக்கு போட்டிகளில் கலந்து கொண்டு பாராட்டுகளும், பரிசுகளும் பெறக்கூடிய வாய்ப்புண்டு. அதிக மதிப்பெண்களை பெற எழுதி பார்ப்பது நல்லது.

வழிபாடு

ராகு பகவானுக்கு ராகு காலத்தில் வெள்ளிக் கிழமை அன்று பால் முட்டை போடுவது நல்லது.

கும்பம்

நீங்கள் செய்த நன்மைகளை எண்ணிப் பார்க்காமல் நன்றி மறந்து நடந்து கொள்பவர்களை எளிதில் மன்னிக்க மாட்டீர்கள். ஆனால் மன்னிப்பதே சிறந்த பண்பாகும்.

சிறப்புப்பலன்கள்

  • உத்யோகஸ்தர்களுக்கு தாங்கள் பொறுமையாக இருந்து வேலைகளை நிறைவு செய்து தருவதன் மூலம் தலைமையின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
  • வியாபாரிகள் வெளியூரிலும் தங்கள் பொருட்களுக்கு தேவை மிகுதிப்படும். ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புண்டு. வியாபாரம் முன்னேற்றம் அடையும்.
  • குகுடும்ப தலைவிகளுக்கு: குடும்பத்தில் அமைதி நிலவும். அதே போன்று பெரியவர்களிடம் மரியாதை செலுத்தி கணவனின் பாராட்டை அள்ளிச் செல்வீர்கள்.
  • கலைஞர்களுக்கு கலைஞர்களுக்கு மிக நல்ல அணுகூலமான திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
  • மாணவர்கள் சக மாணவர்களுடன் வம்பு, வழக்குகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் நட்புணர்வுடன் பழகி வர முயலுவது உங்கள் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள உதவும்.

பரிகாரம்

பச்சைஅம்மனுக்கு புதன் கிழமை அன்று மல்லிகை பூச்சரத்தை தரிவிப்பது நல்லது.

மீனம்

கோபம் உள்ள இடத்தில்தான் நல்ல குணம் இருக்கும் என்பது தங்களுக்குத்தான் பொருந்தும். கோபத்தைக் குறைத்துக் கொண்டால் உங்களை வெல்ல யாராலும் முடியாது.

சிறப்புப்பலன்கள்

  • உத்யோகதர்களுக்கு சக உத்யோகஸ்தர்களின் மனம் கோணாமல் அரவணைத்துச் செல்வதன் மூலம் உயர் அதிகாரிகளின் கண்டனங்களை தவிர்த்து விடலாம்.
  • வியாபாரிகளுக்கு பெரிய அளவில் கடையை அலங்கரித்து கிளைகள் துவங்கவும் இந்த மாதம் தங்களுக்கு இடம் தருகிறது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
  • குடும்பத் தலைவிகளுக்கு நெடுநாட்களாக தடைபட்டு வந்த குலதெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். வீட்டிற்குத் தேவையான சமையலறைப் பொருட்களை வாங்கிவிடுவர்.
  • கலைஞர்களுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும். அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும்.
  • மாணவர்கள் மாணவர்கள் தேர்வு பாடத்தை கவனக்குறைவின்றி படித்தால் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கலாம். ஆசிரியர்களிடம் தங்கள் சந்தேகங்களை கேட்க வெட்கப்பட வேண்டாம்.

பரிகாரம்

சனிபகவானுக்கு சனி கிழமை சனி காயத்ரி மந்திரத்தை படித்து வணங்குவது நல்லது.

சிம்மம்

எந்த ஒரு முயற்சியிலும் ஈடுபட்டு விடா முயற்சியுடன் செயல்பட்டு அதில் வெற்றியைக் காண கூடியவர்கள். தேசப் பக்தியும் தெய்வ பக்தியும் மிகுதியாக பெற்றிருக்கும் நீங்கள்

சிறப்புப் பலன்கள்

  • வேலைக்குச் செல்லும் உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் சக ஊழியர்களிடம் தங்கள் குடும்ப விசயத்தை பகிராமல் இருப்பது நல்லது. வேலைச்சுமையை நேர்த்தியாக கையாளுவீர்கள்.
  • வியாபாரிகள் வியாபாரிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும்.பங்குச் சந்தையால் பணம் அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பு பலப்படும்.
  • குடும்பத்தலைவிகள் நீண்ட தூர யாத்திரை மேற்கொள்வர்.அக்கம் பக்கத்தாருடன் அனுசரனையுடன் செல்லுங்கள்.தம்பதிகளிடையே மனஸ்தாபம் நேரலாம், முன்கோபத்தினை தவிர்ப்பது நல்லது.
  • கலைஞர்கள் நடன கலைஞர்கள், ஒப்பனை கலைஞர்களுக்கு அதிகமான பட கவாய்ப்புகள் கிடைக்கும். நடிகர்களுக்கும் நினைத்த வேடம் கிடைக்கும்.
  • மாணவர்கள் பகுதி நேர வேலைகளை செய்து கொண்டு தங்கள் கைசெலவிற்கு வைத்துக் கொள்வர்.

பரிகாரம்

அங்காள அம்மனுக்கு முல்லை பூச்சரம் கொடுத்து கும்பிடவும்.

கன்னி

நீங்கள் தர்ம நெறிகளை மீறி யார் நடந்து கொண்டாலும் அதைப் பொறுத்துக் கொள்ளாமல் தட்டிக் கேட்க முற்படுவீர்கள்.

சிறப்புப் பலன்கள்

  • உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நீண்ட காலமாக கேட்டு வந்த கடன் உதவிகள் இப்போது கிடைத்து வீடு கட்டும் திட்டம் நிறைவேறி புது வீடு புகும் விழா மேற்கொள்வீர்கள். அது உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
  • வியாபாரம், வியாபாரம் சார்பாக வெளியூர் அல்லது வெளிநாடு சுற்றுப்பயணம் நேரலாம். பார்க்க வேண்டிய நபர்களை சந்திப்பீர்கள். அவர்களால் தங்களுக்கு அதிக மூதலீடுகள் கிடைக்கும்.
  • குடும்பத் தலைவிகளுக்கு வீண் வறட்டு கௌரவத்திற்காக சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டிருக்காதீர்கள். பிள்ளைகளை வளர்க்கும் போது அவர்களை அன்பையும் கண்டிப்பையும் சரிசமமாக கொடுத்து நல்ல அறிவுரைத் தருவதால் அவர்கள் நல்வழியில் செல்வர்
  • கலைஞர்களுக்கு உடற்பயிற்சி மேற்கொண்டு தங்கள் உடலமைப்பை மாற்றிவிடுவீர்கள். முக்கிய வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்.
  • மாணவ மாணவிகள் நன்கு படிப்பர். தங்களது பெற்றோர்களுக்கு நற்பெயர் பெற்றுத் தருவர். சுறுசுறுப்புடன் படிப்பில் அக்கறை செலுத்துவர்.

பரிகாரம்

சிவ பெருமாளை ஞாயிற்றுகிழமை அன்று ராகுகாலத்தில் தரிசிப்பது நல்லது.

துலாம்

எழுத்தாற்றல் மிக்கவரான உங்களுக்கு, கற்பனை வளமும் மிகுதியாகவே அமைந்திருக்கும். திரை வசனக் கர்த்தா பாடலாசிரியர், பத்திரிகை ஆசிரியர் போன்ற துறைகள் ஏதேனும் ஒன்றில் புகழ் பெற்றுத் திகழ்வீர்கள்.

சிறப்புப்பலன்கள்

  • உத்யோகஸ்தர்களுக்கு வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். தங்களுக்கு அவர்கள் மூலம் இடமாற்ற முயற்சிகள் பலிக்கும். பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும்.
  • வியாபாரத்திற்காக வியாபாரிகள் புதிய முதலீடுகளைச் செய்யும் போது அவசரம் இல்லாமல், கூட்டாளிகளை அல்லது குடும்பத்தாரைக் கலந்தாலோசித்து செய்வது நல்லது.
  • குடும்பத் தலைவிகளுக்கு தங்கள் வீட்டில் திருமணம் மற்றும் புது வீடு குடிபுகுதல் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அத்தியாவசியத்தை மட்டும் செய்யப்பாருங்கள்.
  • கலைஞர்களுக்கு படப்பிடிப்புக்கான இடம் பார்ப்பதற்காக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். படபிடிப்பு இந்த மாதம் துவங்கும்.
  • மாணவர்கள் எப்போதும் தாங்கள் எதிரிபாலினரிடத்தில் அதிக நெருக்கமாக பழக வேண்டாம். அது தங்களை பாதிக்கும். ஆதலால், தங்கள் எதிர்கால இலக்கை மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்

லஷ்மி நரசிம்மருக்கு துளசி மாலையை சனிக் அன்று சாத்தி வணங்குவது நல்லது.

விருச்சிகம்

உங்களுக்கு ஒரு சில நண்பர்களே இருந்தாலும் அவர்களிடம் உண்மையுடன் பழகுபவர் நீங்கள். அவர்களின் வாழ்க்கையில் யாராலும் தங்கள் நட்பை பிரிக்க முடியாது.

சிறப்புப் பலன்கள்

  • உத்யோகஸ்தர்களுக்கு உங்கள் வழக்கமான பணிகளை ஊக்கத்துடன் செய்து வாருங்கள். தலைமையில் உள்ளவர்களால் உங்களுக்குரிய மரியாதையைக் கொடுத்து வாழ்த்தி பாராட்டுவார்கள்.
  • வியாபாரிகள் புதிய கிளைகளை துவங்குவர். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. அரவணைத்து செல்வது நல்லது.
  • குடும்பத் தலைவிகள் சேமிப்பை துவங்குவர். மேலும், தங்கள் பெண் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் தங்கள் கடமையைச் செய்வர். பெண்கள் அதுவரை கடமையை உணர்ந்து நடப்பது நல்லது. உங்களுக்கு ஏற்ற மணமகன் கிடைப்பார்.
  • கலைஞர்கள் ரசிகர்களின் உற்சாக மிகுதியால் பெரிதும் மனமகிழ்ச்சி அடைவதுடன் உங்கள் பொருளாதார வசதிகளும் பெருகும்.
  • மாணவர்கள் வெளியூர்களில் விடுதிகளில் தங்கி படிப்பவர்கள் உங்கள் நடவடிக்கைகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து வர வேண்டியது மிக அவசியம். கூடாப் பழக்க வழக்கங்களை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்

பைரவருக்கு செவ்வாய் கிழமை அன்று அவரது பாதத்தில் மிளகு வைத்து வழிபடுவது நல்லது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!