இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இலங்கைக்கு பாதிப்பா ?

#SriLanka
Mayoorikka
16 hours ago
இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இலங்கைக்கு பாதிப்பா ?

இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலையில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிவித்துள்ளது. 

 இந்த நிலநடுக்கம் மக்கள் வசிக்காத பகுதியில் ஏற்பட்டுள்ளதால், எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. USGS தரவுகளின்படி, நிலநடுக்கம் ஏற்பட்ட பிராந்தியம் முற்றிலும் மக்கள் வசிக்காத கடல் பகுதியாகும். 

 எனவே, உயிர்சேதம் அல்லது சொத்து சேதம் குறித்த எந்தத் தகவலும் இதுவரை பதிவாகவில்லை. பிராந்திய சுனாமி எச்சரிக்கை மையங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாவது, இலங்கை மற்றும் இந்தியக் கடற்கரைகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்பதாகும். USGSயும் இதனை முழுமையாக உறுதி செய்துள்ளது. 

 இந்த நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடலின் டெக்டோனிக் தட்டு (Tectonic Plate) எல்லைகளுக்கு அருகில் நிகழும் வழக்கமான நில அதிர்வுகளில் ஒன்றாகும். இப்பகுதியில் அவ்வப்போது இதுபோன்ற நிகழ்வுகள் பதிவாகுவது இயல்பானது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!