கனடாவுக்கான வரியை உயர்த்திய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

#Canada #America #Warning #President #Trump
Prasu
2 hours ago
கனடாவுக்கான வரியை உயர்த்திய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

கனடாவுக்கு மேலதிகமாக 10 சதவீதம் வரியை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விதித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். ஜனாதிபதியாக பதவியேற்றதுமுதல் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், அலுமினியம், இரும்பு உள்பட பல்வேறு பொருட்களுக்கும் 10 முதல் 50 சதவீதம் வரை கூடுதல் வரி விதித்துள்ளார்.

images/content-image/1761463213.jpg

இந்த வரி விதிப்பால் அமெரிக்கா - கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, வரி விதிப்பை குறைக்க இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இந்நிலையில், வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்காவுக்கு எதிரான விளம்பரம் கனடாவின் ஒண்டாரியோ மாகாண அரசால் வெளியிடப்பட்டது.

images/content-image/1761463232.jpg

அதில் மறைந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரோனல்ட் ரிகன், வரி விதிப்பால் அமெரிக்கா பாதிக்கப்படும்என கூறும் வீடியோ இடம்பெற்றிருந்தது. இந்த விளம்பர வீடியோவால் அமெரிக்கா - கனடா உறவில் விரிசல் மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது மேலதிகமாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!