சுமார் 3,000 பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம்
#SriLanka
Mayoorikka
11 hours ago
அரசாங்கத்தின் திட்டமற்ற வாகன இறக்குமதியால் அடுத்த ஆண்டுக்குள் சுமார் 3,000 குறுகிய தூரப் பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். திட்டமிடப்படாத வாகன இறக்குமதியால் வீதிகளில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நெரிசல் காரணமாக பேருந்துகளின் எரிபொருள் செலவு உயருவதுடன், ஒரு நாளைக்கு இயக்கப்படும் பயணங்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது.
இதன் விளைவாக, பேருந்து உரிமையாளர்கள் தொழிலில் இருந்து வெளியேறி வருவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்
(வீடியோ இங்கே )
அனுசரணை
