ஆறு அரச நிறுவனங்களாக பிரிக்கப்பட்ட இலங்கை மின்சார சபை

#SriLanka #government #company #ElectricityBoard #L4
Prasu
5 months ago
ஆறு அரச நிறுவனங்களாக பிரிக்கப்பட்ட இலங்கை மின்சார சபை

நேற்று நள்ளிரவுடன் இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டு புதிய ஆறு நிறுவனங்களிடம் கைமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் மின்சக்தித் துறையில் 56 ஆண்டு காலப் பழமையான இலங்கை மின்சார சபை (CEB) நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஆறு அரச நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

1969ம் ஆண்டு 17ஆம் இலக்க சட்டத்தின் கீழ் இயங்கி வந்த மின்சார சபை, இனி மின் உற்பத்தி, மின் விநியோகம், கடத்துகை மற்றும் கட்டமைப்பு இயக்கம் என ஆறு தனித்தனி நிறுவனங்களாகச் செயற்படும்.

2024ம் ஆண்டின் 36ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் எஞ்சிய விதிகள் இதன் மூலம் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.

தோழர்கள் அதிகாரத்திற்கு வர முதல் தெருக்களில் நின்று தனியார் மயமாக்கலுக்கு எதிராக கடுமையான போராட்டங்களில் ஈப்பட்டனர்.

ஆனால் நாட்டில் இப்போது நடப்பதோ வேறு விருப்ப ஓய்வு திட்டத்தைத் (VRS) தெரிவு செய்யாத ஊழியர்கள் அனைவரும் இந்தப் புதிய ஆறு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை (10) முதல் வழங்கப்படும் என மின்சார சபையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4