போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் இல்லை! பிரதமர் ஹரிணி

#SriLanka #Harini Amarasooriya
Mayoorikka
1 month ago
போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் இல்லை! பிரதமர் ஹரிணி

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் இல்லை என அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

 நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாய்மொழிபோல வினாக்களுக்குப் பதில் வழங்கும் போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார். 

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அரசாங்கம் உடன்படவில்லை எனவும் பிரதமர் கூறியுள்ளார். நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதமர், 

அந்த வாய்ப்பை பயன்படுத்தி, நாட்டு மக்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வைத் தேசிய நெறிமுறைகளினூடாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

 வெளிப்புற நடவடிக்கைகள் நாட்டில் மேலும் பிளவுகளை ஏற்படுத்தும் எனவும், அந்த செயன்முறையானது, உள்ளக செயற்பாடுகளுக்கு இடையூறாக அமையும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயங்களின் அடிப்படையிலேயே சர்வதேச விசாரணைகளை அரசாங்கம் எதிர்ப்பதாகவும் பிரதமர், நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 

 அந்தவகையில் நம்பகமான உள்நாட்டு பொறிமுறையினூடாக, பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!