போதை: இலங்கை, கொலம்பியாவாக மாறுவதைத் தடுக்கும் போரில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்!

#SriLanka
Mayoorikka
4 hours ago
போதை: இலங்கை, கொலம்பியாவாக மாறுவதைத் தடுக்கும் போரில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்!

உலக பாதாள தாதா பாப்லோ எஸ்கோபரின் கதையை, கொலம்பியாவில் நடந்த ஒரு சரித்திரமாக மட்டும் கடந்து சென்றுவிட முடியாது.

 இன்று, இலங்கையின் தெருக்களில், நாம் ஒரு மினி கொலம்பியாவின் உருவாக்கத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கெஹல்பத்தர பத்மேக்களும், சம்பத் மனம்பேரிகளும், ஜுலம்பிட்டிய அமரேக்களும், பாப்லோ எஸ்கோபர் நடந்து சென்ற அதே பாதையில்தான் பயணிக்கத் தொடங்கினார்கள்.

 அவர்களும், தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அரசியலில் நுழைந்தார்கள். அவர்களும், மக்களின் வறுமையைப் பயன்படுத்தி, தங்களை ஹீரோக்களாகக் காட்டிக்கொள்ள முயன்றார்கள். அவர்களும், லஞ்சம் கொடுத்து, அதிகாரிகளை தங்கள் சட்டைப் பைக்குள் வைத்திருக்கப் பார்த்தார்கள்.

 பாப்லோ எஸ்கோபர், கொலம்பியாவின் ஒரு தலைமுறையையே அழித்தொழித்தார். அவர் விதைத்த விஷத்தின் விளைவுகளை, அந்த நாடு இன்றும் அறுவடை செய்து கொண்டிருக்கிறது. அவர் உருவாக்கிய அந்த "Narco-Terrorism" கலாச்சாரம், கொலம்பியாவின் ஆன்மாவையே சிதைத்துப் போட்டது. நமதுஅதிர்ஷ்டம்! நமது தேசம் அந்தப் படுகுழியில் முழுமையாக விழுவதற்கு முன், ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. 

இன்று, போதைக்கு எதிராகவும், பாதாள உலகிற்கு எதிராகவும் ஒரு மாபெரும் யுத்தம் இங்கு தொடங்கப்பட்டுள்ளது.

 பாப்லோ எஸ்கோபரின் கதை, நமக்கு ஒரு எச்சரிக்கை. ஒரு பாடமும் கூட. ஒரு தனிப்பட்ட குற்றவாளியின் எழுச்சி என்பது, ஒரு சிஸ்டத்தின் வீழ்ச்சி. அந்த சிஸ்டத்தை நாம் சரிசெய்யத் தவறினால், ஒவ்வொரு தெருவிலும் ஒரு புதிய எஸ்கோபர் பிறப்பான்.

 இலங்கை, கொலம்பியாவாக மாறுவதைத் தடுக்கும் இந்தப் போரில், நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது.

நன்றி

-ஹிஷாம்-


கொலம்பியபாப்லோ எஸ்கோபார் கேங்ஸ்டர் உலகை சொத்துக்கள் மற்றும் நிகர மதிப்பால் ஆட்சி செய்த ஒரே நபர் என்றால் அது, கொலம்பியன் போதை பொருள் கடத்தல் மன்னர் பாப்லோ எஸ்கோபார்(Pablo Escobar) தான். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து “கோகோயின் உலகின் ராஜாவாக”(King of Cocaine) மாறிய பாப்லோ எஸ்கோபாரின் வாழ்க்கை பயணம் ஒட்டுமொத்த உலகையும் வசீகரிக்கிறது. போதை பொருள் கடத்தல் மன்னனான பாப்லோ எஸ்கோபாரை உலகின் 7வது பணக்காரராக ஒருமுறை Forbes அறிவித்து இருந்தது. 1989ம் ஆண்டில் அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 9 பில்லியன் அமெரிக்க டொலராகும். உலகின் 80 சதவீத கோகோயின் சந்தைக்கு பொறுப்பான இவரது “மெடலின் கார்டெல்”(Medellín cartel) 1980களின் நடுப்பகுதியில் வாரத்திற்கு 420 மில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகத்தையும், ஆண்டுக்கு 22 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகத்தையும் நடத்தியது. தன்னிடம் இருந்து அதிகப்படியான செல்வத்தை வைத்து ஏழை எளிய மக்களுக்கு பணத்தை வாரி வழங்கியது, வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கியது, சமூக கால்பந்து மைதானம் அமைத்தல் மற்றும் மிருகக்காட்சி சாலையை நிறுவுதல் போன்ற செயல்களை செய்ததால் அவர் ராபின் ஹூட் என்று புனைப் பெயரும் பெற்றார். எஸ்கோபார் உலகின் மிகப்பெரிய கேங்ஸ்டரான பாப்லோ எஸ்கோபார் தனக்கென சுயமாக வடிவமைத்துக் கொண்ட தனிப்பட்ட சிறைச்சாலையில் தன்னை அடைத்துக் கொள்வதற்காக கொலம்பியன் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது. கால்பந்து மைதானத்துடன் கூடிய இந்த “லா கேட்ரல்” (La Catedral) ஆடம்பர சிறையில் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட சக கைதிகள் அடைத்து சிறைச் சுவர்களில் காவலில் இருக்கும் காவலர்களையும் கட்டுப்படுத்தி தன்னுடைய போதைபொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தை பாப்லோ எஸ்கோபார் தொடர்ந்தார். பாப்லோ எஸ்கோபார் வாழ்க்கையில் பல நிகழ்வுகள் நாடக திரைப்பட பாணியில் நிகழ்ந்துள்ளது, அந்த வகையில் ஒரு முறை மலை மறைவிடத்தில் தாழ்வெப்பநிலை சிக்கிக் கொண்ட மகளின் உடல் வெப்ப நிலையை அதிகரிக்க சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் வங்கி பண நோட்டுகளை தீயில் போட்டு எரித்துள்ளார்.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!