வடக்கின் அடுத்த முதலமைச்சர் யார்? கதிரைக்கு குடுமிச் சண்டை

மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாகக் களமிறங்கக்கூடிய நபர்கள் தொடர்பில் பிரதான கட்சிகள் தீவிர கவனம் செலுத்தியுள்ள நிலையில் கதிரைக்கு நான் நீ என போட்டி போடும் நிலை தீவிரமடைந்து வருகின்றது.
இந்தநிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்குத் தயார் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார்.
திசைகாட்டி சின்னத்தில் களமிறங்கும் என்பிபி கட்சி யாரை இறக்குவது என தீவிரமாக அலசி ஆராயும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அந்தப் பணிக்காக பிமல் ரத்நாயக்க மற்றும் சந்திரசேகரனை ஆலோசனைக்காக அமர்த்தியுள்ளது அந்தக் கட்சி.
இந்தநிலையில் ஆரம்பத்தில் பம்மிக் கொண்டிருந்த கட்சி உறுப்பினர்கள் தற்போது புயல் வேகத்தில் தமது மக்கள் பணிகளை தொடங்கியுள்ளனர்..அதற்கு உதாரணம் இளங்குமரன்.
இவர் ஆரம்பத்தில் அவ்வளவாக அரசியல் தெரியாதவராய் இருந்தார். அனால் தற்போது அவரது காய்நகர்த்தல்கள் வேற லெவலில் உள்ளது. காரணம் முதலமைச்சர் கனவாகவும் இருக்கலாம்.
அதேபோலத் தான் அர்ச்சுனா, போன்றோரையும் கூறிக்கொள்ளலாம்.
எது எவ்வாறாக இருந்தாலும் ஒற்றுமை இல்லாத தமிழ் அரசியல்வாதிகளால் வடக்கு முதலமைச்சர் கதிரை போககூடாத இடத்துக்கு போய்விடுமோ என்ற பயம் வடமாகாண மக்களுக்கு உள்ள நிலையில் இதில் உள்ளவர்களில் யார் வென்றால் சிறப்பு என்பதை மக்கள் சரியாக தீர்மானிக்கவேண்டும்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



