ஹாங்காங்கில் கடலில் விழுந்த விமானம் - இருவர் பலி!
#SriLanka
#SouthKorea
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
துபாயிலிருந்து பறந்து கொண்டிருந்த ஒரு சரக்கு விமானம் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கடலில் விழுந்ததாக நகர விமான நிலைய இயக்குநர் தெரிவித்தார்.
இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானத்தில் இருந்த நான்கு பணியாளர்கள் மீட்கப்பட்டதாக ஹாங்காங் விமான நிலையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து வடக்கு ஓடுபாதை மூடப்பட்டுள்ளதாகவும், தெற்கு மற்றும் மத்திய ஓடுபாதைகள் தொடர்ந்து இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
