இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜெயானந்த வர்ணவீர காலமானார்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 hours ago

இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜெயானந்த வர்ணவீர இன்று (16) மதியம் தனது 64 ஆவது வயதில் காலமானார்.
1986 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான வர்ணவீர, 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியுள்ளார்.
ஒரு சிறந்த பந்து வீச்சாளரான அவர், 1994 ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபோது 32 டெஸ்ட் விக்கெட்டுகளையும் 6 ஒருநாள் விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.
காலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆடுகளம் தயாரிப்பின் தலைவராகவும் வர்ணவீர இருந்தமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



