தென் கடலில் சிக்கிய போதைப்பொருள் படகு - கைதான 10 பேருக்கும் தடுப்புக்காவல்!

#SriLanka #Arrest #South #Sea #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAPOOJA #custody
Abi
4 months ago
தென் கடலில் சிக்கிய போதைப்பொருள் படகு - கைதான 10 பேருக்கும் தடுப்புக்காவல்!

தென் கடற்பரப்பில் சுமார் 10 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் நவீன ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களை, 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 12ஆம் திகதி ஆழ்கடலில் இரண்டு மீன்பிடி படகுகளை முற்றுகையிட்ட கடற்படையினர், அவற்றில் இருந்த 10 சந்தேகநபர்களையும் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் திக்ஓவிட்ட துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

கைப்பற்றப்பட்ட படகிலிருந்து 176 கிலோ ஹெரோயின் மற்றும் 478 கிலோ 'ஐஸ்' (மொத்தம் 654 கிலோ).8 பிஸ்டல்கள், 2 டி-56 ரக துப்பாக்கிகள், ஒரு எம்-16 ரக துப்பாக்கி மற்றும் அவற்றுக்கான மெகசின்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன.

 22 முதல் 49 வயதுக்கு இடைப்பட்ட இரணவில, மஹவெவ, நீர்கொழும்பு, தங்காலை மற்றும் கந்தர உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4