நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது எமது முதன்மை நோக்கம்! அனுரா

நாட்டின் முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக சூழல் மற்றும் சட்ட நிலைமைகள் குறித்து ஆய்வு செய்யும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் குழுவுடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி அண்மையில் பங்கேற்றார்.
முன்னர் இருந்த முறைகேடுகளை மாற்றி முதலீடுகளுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சூழலை மேலும் பலப்படுத்த வெளிப்படையான புதிய சட்டங்களை உருவாக்கி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்றும், இதற்காக, இனவாதம் மற்றும் மதவாதம் எனபவற்றை ஒதுக்கி தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புதல், செயற்திறனான அரச சேவையை உருவாக்குதல், வெளிப்படையான இராஜதந்திர உறவுகள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றின் நோக்கங்களை அடைய அரசாங்கம் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



