இந்தியாவில் கொசு வர்த்தியால் குழந்தை உட்பட மூவர் மரணம்

#India #Death #Tamil Nadu #family #L4
Prasu
1 month ago
இந்தியாவில் கொசு வர்த்தியால் குழந்தை உட்பட மூவர் மரணம்

தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் கொசுவர்த்தி சுருளால் ஏற்பட்ட தீ விபத்தில், குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.

கூடுவாஞ்சேரியை அடுத்த கன்னிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 33 வயது பார்த்திபன் தனது 29 வயது மனைவி ஜெயசித்ரா மற்றும் மகள் ஜெயஸ்ரீ ஆகியோருடன் வசித்து வந்தார். 

இவர்கள் இருக்கும் பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக இருந்த காரணத்தினால், கொசுவர்த்தி சுருளை ஏற்றி வைத்துவிட்டு தூங்க சென்றதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து கொசுவர்த்தி சுருள் அருகில் இருந்த துணிகள் அல்லது ஏதோ ஒரு பொருளின் மீது விழுந்து தீ பரவி அறை முழுவதும் நச்சுப்புகை ஆக்கிரமித்தது. 

இதனால் வீட்டில் இருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, தப்பிக்க வழி இல்லாததால், பார்த்திபன் உட்பட மூவரும் உடல் கருகி அங்கேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!