இலஞ்சம் பெற உதவி புரிந்த அதிகாரி ஒருவர் கைது!

#SriLanka #Arrest #Lanka4
Mayoorikka
2 months ago
இலஞ்சம் பெற உதவி புரிந்த அதிகாரி ஒருவர் கைது!

இலஞ்சம் பெற உதவி புரிந்த நியாகம பிரதேச செயலாளர் அலுவலக அபிவிருத்தி அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

 இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் அளிக்கப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கமைய அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். 

 முறைப்பாட்டாளர் வீடு ஒன்றை பெறுவதற்காக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் 10 இலட்சம் ரூபாய் நிதி உதவிக்கான அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளார். 

 வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் குறித்த நிதியிலிருந்து 150,000 ரூபா தொகை முதற்கட்டமாக வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள பணத்தை பெற்றுத்தர உதவுவதாக தெரிவித்து 25 ஆயிரம் ரூபா பணத்தை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவத்தில் பிரதான சந்தேக நபரான அபிவிருத்தி அதிகார சபையின் (தொழில்நுட்ப) உத்தியோகத்தர் கருசிங்ஹகே சுரங்க பிரசாத் சோமசிரி செப்டம்பர் 15ஆம் திகதி கைது செய்யப்பட்டார். 

 சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து திங்கட்கிழமை (13) உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் நியாகம பிரதேச செயலாளர் அலுவலக அபிவிருத்தி அதிகாரி கிரிதரகே ரணில் நிஷாந்த ஜயவர்தன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!