அமைதி ஒப்பந்தத்தின் கீழ் பணயக் கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ்!
#SriLanka
#Israel
#Hamas
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 hours ago

காசா அமைதி ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கத் தொடங்கியுள்ளது.
இஸ்ரேலிய பணயக்கைதிகள் 20 பேர் இன்று (13) விடுவிக்கப்படுவார்கள், மேலும் அவர்களின் பெயர்களின் பட்டியலை அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
அதன்படி, ஹமாஸ் முதல் கட்டமாக வடக்கு காசா பகுதியில் உள்ள 07 பணயக்கைதிகளை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பின்னர் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் அந்தக் குழுவை இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைப்பார்கள்.
விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகளை வரவேற்க அவர்களின் உறவினர்கள் உட்பட ஏராளமான மக்கள் தலைநகர் டெல் அவிவில் கூடியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(வீடியோ இங்கே )
அனுசரணை



