காசா போர் நிறுத்த மாநாட்டிற்கு சென்ற 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி மரணம்

இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த நாளை உலகத் தலைவர்கள் எகிப்தில் கூடுகின்றனர்.
இந்த சர்ம் எல்-ஷேக் அமைதி உச்சி மாநாடு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஆகியோரால் இணைந்து நடத்தப்பட உள்ளது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உச்சி மாநாட்டில் போர்நிறுத்ததை உறுதிப்படுத்துதல், காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்தல் மற்றும் போருக்குப் பிந்தைய மறுசீரமைப்புக்கான திட்டமிடல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
காசா போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் கத்தார் மிக முக்கியமான மத்தியஸ்தர்களில் ஒன்றாகச் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் , எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில் கத்தார் நாட்டைச் சேர்ந்த மூன்று தூதர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்
காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான உச்சி மாநாட்டின் ஏற்பாடுகளில் பங்கேற்க இந்தத் தூதர்கள் சர்ம் எல்-ஷேக்கிற்குப் பயணித்துக்கொண்டிருந்தனர்.
அவர்கள் பயணித்த வாகனம், நகரத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கூர்மையான வளைவில் கவிழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(வீடியோ இங்கே )



