போர் நிறுத்த ஒப்பந்தத்தின் எதிரொலி - காசா அமைதி மாநாடு நாளை ஆரம்பம்!
காசா பகுதியில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான காசா அமைதி மாநாடு நாளை (13) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஆகியோரின் தலைமையில் நடைபெறும்.
நாளை மதியம் எகிப்தில் நடைபெறும் மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியா, இத்தாலி மற்றும் ஸ்பானிஷ் பிரதமர்கள், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் ஏற்கனவே தங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளனர்,
மேலும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸும் காசா அமைதி மாநாட்டில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மாநாட்டில் கலந்து கொள்வாரா இல்லையா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஹமாஸ் மாநாட்டில் பங்கேற்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
