பிரதமர் ஹரிணி அமரசூரிய, நாளை சீனாவுக்குப் பயணம்!
#SriLanka
#PrimeMinister
#China
#Lanka4
#Harini Amarasooriya
Mayoorikka
1 month ago
பிரதமர் ஹரிணி அமரசூரிய, நாளை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அவர், வரும் 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின் போது, பீஜிங்கில் “ஒரு பகிரப்பட்ட எதிர்காலம்: பெண்களின் முழுமையான வளர்ச்சிக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட செயல்முறை” என்ற தலைப்பில் நடைபெறும், சீனா மற்றும் ஐ.நா. இணைந்து ஏற்பாடு செய்துள்ள பெண்கள் தொடர்பான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய உரை நிகழ்த்துவார்.
இந்தப் பயணத்தின் போது, சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கியாங் உள்ளிட்ட பல உயர் மட்ட தலைவர்களையும், பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்தித்துப் பேச்சு நடத்துவார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
