மெக்சிகோவில் கனமழை - குறைந்தது 22 பேர் உயிரிழப்பு!

மெக்சிகோவில் நிலவிய சீரற்ற வானிலையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹிடால்கோ மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக அடையாளப்படுத்தப்பட்டதுடன், அங்கு 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சீரற்ற வானிலையால் குறைந்தது 1,000 வீடுகள், 59 மருத்துவமனைகள் மற்றும் முந்நூறுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. 84 நகராட்சிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான பியூப்லாவில், மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் மாயமாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூரைகளில் தவித்த சில சிறுவர்கள் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சுமார் 80,000 பேர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



