யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த தாய்: குழந்தை தொடர்பில் வெளியான தகவல்
#SriLanka
#Jaffna
#Hospital
#Lanka4
Mayoorikka
2 months ago
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நெடுந்தீவைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் பிரசவத்தின் பின் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்றைய தினம் இரவு இடம்பெற்றதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நெடுந்தீவைச் சேர்ந்த 25 வயது கில்மன் நோபட் தர்சிகாமேரி என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயர் குருதியமுக்கம் மற்றும் வலிப்பு காரணமாக உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இளம் தாய்க்குப் பிறந்த பெண் குழந்தை வைத்தியசாலையில் ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் வைத்திய பரிசோதனைக்குப் பின் இன்று (10) உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
