பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு
#world_news
#Earthquake
#Lanka4
Mayoorikka
1 week ago

பிலிப்பைன்ஸில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அந்நாட்டின் மிண்டனோ தீவில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 9.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மிண்டனோ தீவின் மெனே நகர் அருகே கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், அச்சமடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 03 அடி வரை சுனாமி அலைகள் உருவாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதா? என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
(வீடியோ இங்கே )
அனுசரணை



