15 வயதிற்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!

#world_news #Lanka4 #Denmark
Mayoorikka
1 week ago
15 வயதிற்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!

15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக டென்மார்க் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 பிரதமர் மெட் ஃபிரடெரிக்சன், பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இந்த திட்டத்தை அறிவித்துள்ளார், ஆனால் நடைமுறையில் எவ்வாறு மற்றும் எப்போது செயல்படும் என்பதை தெரிவிக்கவில்லை.

 “தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் நம் குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைக் கொள்ளையடிக்கின்றன. 

மேலும், அதிகமாக அடிமையாகுவதால் அவர்களது கல்வி நடவடிக்கைகள், உடல் ஆரோக்கியங்கள் பாதிக்கப்படுகின்றது” என்று பிரதமர் ஃபிரடெரிக்சன் குறிப்பிட்டுள்ளார்.

 டென்மார்க் தற்போது 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு Facebook, Snapchat, TikTok மற்றும் YouTube உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் தடையை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியாவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!