யாழில் ஆசிரியர் மாணவிகளுடன் அங்கசேட்டை! மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

#SriLanka #Lanka4 #Teacher
Mayoorikka
2 months ago
யாழில் ஆசிரியர் மாணவிகளுடன் அங்கசேட்டை!  மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

யாழ் நகரை அண்மித்த பாடசாலை ஒன்றில் தரம் 10இல் கல்வி கற்கும் பெண் மாணவிகளுடன் அதே பாடசாலையில் கல்வி கற்ப்பிக்கும் சமய பாட ஆண் ஆசிரியர் அங்க சேட்டையில் ஈடுபட்டமை தொடர்பில் பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பெற்றோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

 சம்பவம் தொடர்பை தெரிய வருவது யாழ் நகரப் பகுதி ஒன்றில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் பத்தில் கல்வி கற்கும் மாணவிகளுடன் அதே பாடசாலையில் கல்வி கற்ப்பிக்கும் ஆண் ஆசிரியர் ஒருவர் தொடர்ச்சியாக அங்க சேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். 

 குறித்த விடையம் தொடர்பில் சில மாணவிகளின் பெற்றோர் பாடசாலை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்திய நிலையிலும் பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. 

 இதன் காரணமாக மாணவிகளுக்கு நடந்த அநீதி தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்திற்கு செய்த முறைப்பாட்டு அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!