மொழி மதத்தை அடிப்படையாக கொண்டு ஜனாதிபதியாக பதிவி வகிக்க முடியாது என்ற கொள்கையை மாற்ற வேண்டும்!
#SriLanka
#Lanka4
#AnuraKumaraDissanayake
Mayoorikka
1 month ago
ஒருவர் பின்பற்றும் மதத்தை பேசும் மொழியை அடிப்படையாக கொண்டு அவரால் ஒரு நாட்டின் பிரதமராக, ஜனாதிபதியாக பதிவி வகிக்க முடியாது என்ற மன நிலையை தோற்றுவித்து வைத்திருப்பது நியாயமற்றது மட்டுமல்ல அது நீதியுமானது கிடையாது என அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் ஒருநாள் சம்பந்த ஐயா என்னுடன் பேசும் போது அனுர, நான் ஒரு இலங்கையன் ஒரு இலங்கை பிரஜை கேட்க உரத்து சொல்லுவேன் ஆனால் நான் நாட்டில் இரண்டாம் தர பிரஜையாக வாழ விரும்ப மாட்டேன் என கூறினார் அவரது கோரிக்கை நியாயமானது தானே.
இன்னொருவர் சொன்னார் என்னால் இந்த நாட்டில் வகிக்கக்கூடிய அதிஉயர் பதவி அமைச்சர் பதவி மட்டுமே அதை அடைந்து விட்டேன் என்று அப்படி ஒருவருக்கு நினைக்கத் தோன்றுவது சாதாரண விடயமா? என அனுரகுமார கேள்வி எழுப்பியதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
