கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரதி பணிப்பாளராக கடமையேற்கும் டாக்டர். ஜமுனாநந்தா!
#SriLanka
#Colombo
#Hospital
Mayoorikka
6 days ago

பிரதி பணிப்பாளர் டாக்டர். ஜமுனாநந்தா அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரதி பணிப்பாளராக நாளை கடமையேற்கிறார்.
கடந்த ஆறு வருடங்களாக யாழ் போதனா வைத்தியசாலையில் பிரதி பணிப்பாளராக பணியாற்றிய டாக்டர் ஜமுனாநந்தா அவர்கள், இன்று இடமாற்றம் பெற்றதையடுத்து, நாளைய தினம் (10.10.2025) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரதி பணிப்பாளராக கடமையை பொறுப்பேற்கிறார்.
இதனையொட்டி, இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் அவரது பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.
இதில் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பல்வேறு நிலைகளில் உள்ள மருத்துவமனையின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு, அவரது சேவையை பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



