காசாவிற்கு நேரில் சென்று நிலைமையை பார்வையிட தயாராகும் டிரம்ப்!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரு தரப்பும் அமைதி திட்டத்தின் முதல் கட்டத்துக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் இடம்பெற்றுள்ள காசாவிற்கு நேரடியாக செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவருடைய பாதுகாப்பு கருதி கட்டார் போன்ற சில நாடுகளின் பிரதிநிதிகளும் அங்கு செல்லவுள்ளதாக அறிய வந்துள்ளது.
அத்துடன் இஸ்ரேலின் பிரதிநிதிகளும் டிரம்புடன் செல்ல வாய்ப்புக்கள் உள்ளன. டிரம்ப்பின் பாதுகாப்பு கருதி இரண்டு தரப்பு பிரமுகர்களும் அங்கு செல்ல வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளன.
காஸாவை பொறுத்தவரையில் ஜனாதிபதி ஒருவர் நேரில் சென்று நிலமைகளை பார்வையிடுவது இதுவே முதல் தடவையாகவுள்ளது.
நோபல் பரிசு பெறுவது டிரம்ப் இன் குறிக்கோளாகவுள்ள நிலையில் காசா செல்வதன் மூலம் அதற்கான படிக்கற்களைக் அமைத்துக்கொள்ளலாம் என எண்ணியுள்ளார்.
இதன்காரணமாக அவசர அவசரமாக அங்கு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செய்து காசாவிற்கு செல்ல தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
(வீடியோ இங்கே )
அனுசரணை



